மாவனெல்ல ஹிந்தெனிய மயானத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 24 மற்றும் 25 வயதுடைய மாவனெல்ல பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.
மாவனெல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 8,100 போதை மாத்திரைகள் மற்றும் சந்தேகநபர்கள் பயணிப்பதற்கு பயன்படுத்திய வந்த வேன், உந்துருளி ஆகியன பொஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபர்களில் ஒருவர் கொழும்பில் இருந்து போதைப்பொருளை வேன் மூலம் கொண்டு வந்து மேற்படி பகுதியில் உந்துருளியில் வந்த இரு சந்தேக நபர்களுக்கு விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக தெரியந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.