மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் – பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனைத் தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார். ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.