முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எளிய பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (26) கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கும்புறுமுல, யட்டியந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் இறால் பண்ணையில் வேலை செய்துவருவதுடன், சிலருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது தனிப்பட்ட முரண்பாடு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொ லை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கெக்கிராவ, பலாகல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.