ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து மல்லியப்பு சந்திக்கு அருகில் இன்று காலை 10 மணிக்கு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.