அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆரம்பக் கல்வி நெறி ஆசிரியர் பயிலுனர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆக்க திறன்களை விருத்தி செய்யும் வகையிலான கண்காட்சி நிகழ்வு வெள்ளிக்கிழமை(13) கல்லூரியின் பீடாதிபதி சட்டத்தரணி கே.புண்ணியமூர்த்தி தலைமையில் மன்றத்துக்கு பொறுப்பான விரிவுரையாளர்களின் ஆலோசனைக்கு அமைவாக கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொடருறு கல்விப் பிரிவுக்கு பொறுப்பான உப பீடாதிபதி எம்.ஐ.ஜஃபர், நிதி மற்றும் நிருவாகத்திற்கான உப பீடாதிபதி எம்.சீ.ஜூனைட், கல்வி மற்றும் தர மேம்பாட்டுக்கான உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர் மற்றும் விரிவுரை இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்வியலாளர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.