கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மொரலிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
ருவன்வெல்ல, மொரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.