அரிசி மற்றும் தேங்காய் விலை உயர்வினால் ஹட்டனை சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள பலர் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் அரிசி, தேங்காய், மரக்கறி போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், தமது வருமானம் அதிகரிக்கப்படாமல் தற்போது கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா போன்ற சில சிறிய கடைகளில் அரிசி மற்றும் தேங்காய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், சில கடைகளில் தேங்காய் 180/= முதல் 200/=, 220/= ரூபாய் வரையிலும், நாட்டு அரிசி ஒரு கிலோ 240/= முதல் 250/= ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறான நிலைமைகள் காரணமாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது இரண்டு வேளைகள் சரியாக சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் பெரும் தொகை அரிசி பதுக்கி வைத்துள்ளதாகவும் அந்த அரிசி 220/= விலை பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவற்றை களஞ்சியசாலைகளில் பதுக்கி உள்ளனர் என பாவனையாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர்.