கடுவலை, ஹேவாகம பிரதேசத்தில் வீதியில் பயணித்த நபரொருவரை மோதி விட்டு தப்பிச் செல்ல முயன்ற கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நபரொருவரை காரால் மோதி கொலை செய்வதற்கு முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த காரை நிறுத்துமாறு காரின் சாரதிக்கு உத்தரவிட்டுள்ளனர். இதன்போது, காரில் பயணித்த சந்தேக நபர்கள் பொலிஸ் உத்தரவையும் மீறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் கார் மீது இரு தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஆனாலும் சந்தேக நபர்கள் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.