தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி இன்றைய தினம்(10) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர்.ல ஹேர்மன் குமார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் உட்பட பல்வேறு அமைப்புக்ககளும் கலந்து கொண்டிருக்கின்றன.