கிளிநொச்சி மற்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையங்களில் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவளத்துணை விழிப்புணர்வு செயற்பாடு நேற்று(8) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டத்தில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உளவளத் துணை ஆலோசனைகளை வழங்கும் விதத்தில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், தர்மபுபுரம் பொலிஸ் நிலையத்திலும் குறித்த செயற்பாடு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நேற்று 10 மணிக்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும், பகல் 12 மணிக்கு தர்மபுரம் பொலிஸ் நிலையத்திலும் குறித்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.