தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற விஜயராஜ் தமிழ்நிலவன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது.கிளிநொச்சியிலுள்ள வடமாகாண விளையாட்டுக் கட்டிடத்தொகுதியின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. சிரேஸ்ட கராத்தே பயிற்றுநர் எம். இரத்தினஜோதி அவர்கள் கெளரவித்தார்.குறித்த நிகழ்வில் தேசிய கராத்தே சங்கத்தின் பிரதிநிதிகள், மாவட்ட பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.