இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்தை நோக்கி அழைத்து வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, குறித்த 8 இந்திய மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.