12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விளம்பரங்களுக்காக பயன்படுத்த முடியாது என சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் அசங்க விஜேமுனி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியர் விளம்பர பிரசார நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதனை ஜனவரி மாதம் 1ம் திகதியுடன் நிறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த கால அரசாங்கங்கள் கடந்த 7 – 8 ஆண்டுகளாகவே இந்த நடைமுறையை நடைமுறைப்படுத்த காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நடைமுறையை எதிர்வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அறிமுகம் செய்வதாகத் பிரதி அமைச்சர் அசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.