பதுளை – கொழும்பு வீதியில் களுபஹன சந்திக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
இந்த விபத்தின் போது உந்துருளியின் செலுத்துனர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
