கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (02) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.