முச்சக்கர வண்டி சாரதிகள் சாலையில் கிடந்த பெருமதி மிக்க தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை நிருபித்த ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்.இச் சம்பவம் நேற்று முன்தினம் ஹட்டன் பதுளை சென்று திரும்பிய சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் புவனேஸ்வரன் தம்பதியர் தமக்கு உரித்தான இரண்டு பவுண் எடையுள்ள தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கி சென்ற வேளையில் தவர விட்டு உள்ளனர்.அதனைத் கண்டு எடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன்,தம்பிராஜ் சின்ன தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் .உரியவரிடம் கையத்தனர்இவர்களது நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர்.தவிர விட்ட தம்பதியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.