லக்கல பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக்கல், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் நேற்று(29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம், 7 பவுன் தங்கம், இரண்டு போலி துப்பாக்கிகள், இந்த கொள்ளை சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வேன் என்பவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.