நெடுங்கேணியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கீரிசுட்டான் பட்டிக்குடியுருப்பு வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் பொதுமக்களின் போக்குவரத்தானது பாதிப்படைந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வீதி ஓரத்தில் நின்ற பாரிய மரம் ஒன்று காற்று காரணமாக முறிந்து விழுந்ததினால் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்துக்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதனை சம்பந்தப்பட்ட பிரதேச சபை அதிகாரிகள் வீதியில் காணப்படுகின்ற மரத்தினை அகற்றி பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
