தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் தம்பி அடித்து அண்ணன் உயிரிழந்த சம்பவமொன்று சாலியவெவ பகுதியில் இன்று (15) இடம்பெற்றுள்ளது.
சாலியவெவ – பலுகஸ்சேகம பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய உதித ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ADVERTISEMENT
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கொலைசெய்யப்பட்ட நபர், தனது சகோதரனான தம்பி மற்றும் நண்பருக்கு அவரது வீட்டில் விருந்து வைத்துள்ளார். இதன்போது, தொலைபேசி தொடர்பில் சகோதரர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதமாக ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில், அண்ணனை தம்பி கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.