காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிரிபென்ன பிரதேசத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
உயிரிழந்தவர் காலி, மிஹிரிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மீனவர் ஒருவர் ஆவார்.
முன்விரோதம் காரணமாக மீன்பிடி துறைமுகத்திற்குச் சென்ற இனந்தெரியாத மூவரால் இந்த வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.