வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் – பி. ப 4.00 வரை பொதுமக்களை சந்திக்க உள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய தீர்வுகளை விரைவாக வழங்கும் நோக்கத்தில் நடமாடும் சேவையினை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் அதிகளவான பொதுமக்கள் பங்குபற்றி பயன்பெற்றனர். இதேபோல் மன்னார், வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடமாடும் சேவை இடம்பெற உள்ள திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.