அநுராதபுரம், கப்பிரிங்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 70 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிஹிபியகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ADVERTISEMENT
உயிரிழந்த முதியவர் சம்பவ தினத்தன்று இரவு நேரத்தில் தனிப்பட்ட தேவை காரணமாக தனது வீட்டின் பின்புறத்திற்குச் சென்றுள்ளார். இதன்போது வீட்டின் பின்புறத்தில் இருந்த காட்டு யானை ஒன்று முதியவரை தாக்கியுள்ள நிலையில், காயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.