கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவன் பாடசாலை முடிவடைந்த பின்னர் மேலதிக வகுப்புக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்துக்குச் சென்ற வேளை இந்தப் பரிதாபச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.