சிகிரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலகொலவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கலஹ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
உயிரிழந்தவரது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.