கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம வாவியில் நீராடச் சென்ற இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 24 மற்றும் 34 வயதுடைய பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இருவரும் மேலும் இருவருடன் மது அருந்திவிட்டு நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரின் சடலங்களும் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.