அகில இலங்கை பாடசாலை மட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தருஷி அபிஷேகா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் 1500 மீற்றர் தூரத்தை அவர் 4 நிமிடங்கள் 29 செக்கன்களில் நிறைவு செய்துள்ளார். இதற்கு முன்னர் 1985ஆம் ஆண்டு அந்த போட்டி தூரத்தை தம்மிகா மெனிக்கே 4 நிமிடங்கள் 35 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.
இந்தநிலையில் 39 ஆண்டுகளுக்குப் பின்னர் தருஷி அபிஷேகா அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.