கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வைத்து மறித்த இருவர், பொல்லுகளுடன் பேருந்தில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.
நேற்று மாலை 6.50 மணியளவில் இந்தக் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த சாரதி, பேருந்தை பயணிகளுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று முறையிட்டார். அதன்பின்னர் சாரதி, வவுனியா வைத்தியசாலை சென்று அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலை மேற்கொண்டவர்கள் தனியார் பேருந்தில் பணியாற்றுபவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.