மகளிர் உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் நியூசிலாந்து மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 129 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இதற்கமைய மகளிர் உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.