துபாயில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான “ரொஹான்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு கிராண்ட்பாஸ், ஸ்டேஸ்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து 250 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.