தியாக தீபம் திலீபனின் 37 வது நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை(26) காலை மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இன்று காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவித்து,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது மத தலைவர்கள்,சமூக செயற் பாட்டளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.