நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார்.
சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை.
ADVERTISEMENT
நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் தரித்து நிற்கும் நிலையில் உள்ளதாக நல்லதண்ணி மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.