இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற திலினி குமாரி இன்று (17) இலங்கை வந்தடைந்தார்.
உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.
பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.