உத்தர பிரதேசம், மொரதாபாத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் தனது குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இரவு குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்போது குழந்தையின் தாய் குழந்தையை எடுத்துச் சென்று குளிர்சாதன பெட்டியில் வைத்து கதவை மூடினார். குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார்.
சிறிது நேரத்திற்கு பிறகு குளிர் தாங்காமல் குழந்தை அழுதது. குழந்தை அழும் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தபோது குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் தாயிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரசவத்திற்கு பிறகு இளம்பெண்ணிற்கு மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.










