மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் பாரிய இன்னல் உற்று வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் முதியோர்கள் நோயாளிகள் பாரிய அளவில் சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் சுமார் பத்து நிமிடத்தில் செல்லும் 1500 மீட்டர் தூரத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது எனவும் கடந்த காலங்களில் இருந்தது போல் அவ் குறுக்கு வீதியை தந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
ராஜமலை பிரிவில் வெளிகல உத்தியோகத்தர் ஒருவரே இந்த குறுக்கு வீதியை முடி படிக்கட்டு அமைத்து படிகளுக்கு முன்னாள் கற் குவியல் குவியலாக அடுக்கி வைத்து உள்ளது.இதன் காரணமாக தரம் ஒன்று முதல் 13 வரை நல்லதண்ணி, மஸ்கெலியா, கொட்டகலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தற்போது தோட்ட நிர்வாகிகள் வழங்கி உள்ள படிகளில் இறங்கி ஏறி செல்ல முடியாது அந்த படி கட்டுகள் பாரிய அளவில் குன்றும் குழியுமாக உள்ளது அத்துடன் ஏறி இறங்கி செல்ல முடியாது உள்ளது என பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக இருந்து போல குறுக்கு வீதியில் புதிதாக அமைத்துள்ள படி கட்டுகளை அகற்றும் படியும் அந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் செப்பனிட தேவை இல்லை அந்த வீதியை தாமாகவே முன்வந்து சிரமதானம் செய்து கொள்ள முடியும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இரண்டு கிலோ மீட்டர் சுற்றி வரும் பட்சத்தில் இடை நடுவில் சிறு சிறு காடுகளும் உள்ளன இந்த பகுதியில் பன்றி சிறுத்தை நடமாட்டம் அதிகம் தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் 8 பேர் உள்ளனர் இவர்களில் பாதுகாப்பு பற்றி தோட்ட நிர்வாகிகள் கவணம் செலுத்துவது டன் ஏனைய மாணவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்க அதிகாலை 5.45 புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மறே தோட்ட ராஜமலை பிரிவு சிவனடி பாத மலை வனத் தொடரில் சிவனடி பாத மலை உச்சி பகுதியில் அமைந்துள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இம் மக்களின் நலன் பேண வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.










