Browsing: Uncategorized

மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாயின் கை, கால்களை கட்டி வைத்து 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தாயின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் நபர் ஒருவர் நேற்று (9) கைது செய்யப்பட்டுள்ளார்.. கைது செய்யப்பட்டவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபராவார். இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது சந்தேக நபர் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் சிறுமியின் தாயின் கை, கால்களை கட்டி […]

இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப […]

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண்  சடலமாக மீட்கப்பட்டுள்ள  சம்பவம் ஒன்று இன்று (10.02.2024) காலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் குறித்த  பெண், குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 11 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். […]

எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டதே. பாடகர் ஹரிகரன் குழுவினரின் யாழ்ப்பாண இசைநிகழ்வு இத்தகைய உள்ளக்கிளர்த்தல்களைப் பலரிடம் எழுப்பிவிட்டது. யாழ்ப்பாணத்தவர்கள் பொதுவாகவே கலையை ஆராதிப்பவர்கள் தான். கலைஞர்களை மதிப்பவர்கள் தான். ஆனால் சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் இப்படி நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு எந்தக் காலத்திலும் அலைந்தவர்கள் அல்லர். இப்போது ’முற்றவெளியில் முதன்முறையாக ‘ என்ற அறிவிப்புடன், ஏதோ கலையுணர்வே அற்ற ஜென்மங்களுக்காக , மனமிரங்கி வந்திருப்பதாகவே ஹரிகரன் இசைநிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தவர் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு ஈழத்தவர். புலம்பெயர் பணக்காரர்களில் […]

நேற்றிரவு யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த வெளி அரங்கில் தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமன்னா, ரம்பா, யோகிபாபு, ஸ்வேதா மேனன், பாலா, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்குபற்றினர். இந்த நிகழ்வானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது நொதேண் யுனியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த நிலையில் அசாதாரண காலநிலை காரணமாக பெப்ரவரி 9ஆம் திகதிக்கு […]

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் அவர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மு.கோமகன் அவர்கள் தெரிவிக்கையில், எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை. ஆனால் எனக்கு […]

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல் தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியாஇ இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவேஇ அதற்கான சந்தர்ப்பத்தை […]

இந்தியாவின் நாகப்பட்டினத்தையும் திருகோணமலை எண்ணெய்க் குதத்தையும் இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் அமைக்கும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி வாரத்தினை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தேச எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் தொடர்பில் இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் நேற்று முன்தினம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசாங்கம் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டத்தினை முன்மொழிந்துள்ளது என எரிசக்தி அமைச்சர் […]