யாகி’ சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘யாகி’ சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில் கரையைக் கடக்கும் முன், சூறாவளியால் 287 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வியட்நாமிலிருந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
மியான்மாரை மணிக்கு 200 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் சூறாவளி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் 3 இலட்சத்திற்கும் அதிகமான மியான்மார் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மியான்மாரில் சூறாவளியின் தாக்கத்தால் 113 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 64 பேர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.