வவுனியா மாவட்டம் வெங்கல செட்டிக்குளம் பிரதேசத்திற்க்கு உட்பட்ட கணேசபுரம் திருமூலர் அறநெறிப் பாடசாலைக்கான புதிய கட்டிடம் ஒன்று இரண்டு மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டு இன்று காலை 11:30 மணியளிவில் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு திருமூலர் அறநெறி பாடசாலை நிருவாகத்திடம் கட்டிடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
திருமூலர்அறநெறிப்பாடசாலை தலைவர்.
தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் விழா மண்டபம் வரை மலர்மாலை அணிவிக்கப்பட்டு வெவேற்க்ப்பட்டதனை தொடர்ந்து கல்வெட்டினை திரை நீக்கம
செய்து வைத்ததுடன் அறநெறி பாடசாலை கட்டிடத்தினை திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து மங்கல சுடர்களை பிரதம சிறப்பு விருந்தினர்கள் ஏற்றியதை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.
வரவேற்பு நடனம், வரவேற்பு உரையை தொடர்ந்து கருத்துரைகளை வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை இந்துகலாசார உத்தியோகஸ்தர் சி.சிவகஜன்
வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலக உத்தியோகத்தர் ச.ஜேந்திரன்
சமூக செயற்பாட்டாளர் இ. தாயபாரன், உட்பட பலரும் சிறப்புரை ஆற்றினர்.
தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் நடனம், வில்லிசை, பேச்சு உட்பட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றது.
அதேவேளை ரூபா 175,000 பெறுமதியான தளபாடங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு தலா 10kg வீதம் அரிசியும் வழங்கிவைக்கப்பட்டன
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரம தொண்டர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள்
அறநெறி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்,
சைவ சமய பிரச்சாரகர் தமிழருவி சிவகுமார்
மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.