இலங்கையின் முதற் தடவையாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொட்டகலை நகரில்.இன்று மதியம் 12 மணிக்கு கொட்டகலை ஹரஇங்ட்டன் தோட்டத்தில் இருந்து முதல் விநாயகர் சிலை அத் தோட்ட பக்தர்களுடன் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அங்கு இருந்து கொட்டகலை நகரை அண்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களில் இருந்து தனி தனியாக அந்த அந்த தோட்ட மக்களால் விநாயகர் சிலைகள் கொட்டகலை பிரதேச சபை முற்றத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
அனைத்து தொடர்ந்து அங்கு இருந்து கொட்டகலை நகர்வழியாக அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ளது.
கொமர்சல் பகுதியில் உள்ள நீர் தடாகத்திற்க்கு சுமார் மூன்று ஆயிரம் பக்தர்கள் புடைசூழ எடுத்து வரப்பட்டு தடாகத்தில் கரைக்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகிறது.