மழையுடனான வானிலை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேகத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீரின் அளவை விட நொடிக்கு 120 கன அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக புலத்சிங்கள பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
நீர்த்தேகத்தின் நீர் மட்டம் தற்போது குறைந்துள்ளதால் வெள்ள அபாயம் இல்லை. ஆனால் தொடர்ந்து மழை பெய்தால் நீர்த்தேகத்தை அண்டியுள்ள தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.