ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தமிழ் மக்களின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் குலைப்பதற்கான அடித்தளமாகத் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் அறிவிப்பை நாங்கள் கருதுகின்றோம் என வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்பின் பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கிளிநொச்சி மற்றும் திருகோணமலை கிளைகளினால் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியை நம்பாமல் சுயமாக சிந்தித்து, எங்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை பலத்தினால் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
மேலும், தங்களுடைய சுயலாபத்துக்காகவும், தங்களது மதுபான நிலைய அனுமதிப் பத்திரத்துக்காகவும், தாங்கள் கோடிகளை சம்பாதிப்பதற்காகவும் தமிழ்மக்களை எதிர்காலத்தில் விற்றுப் பிழைப்பது சாத்தியமற்றது” என்றார்.