மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உறுதியளித்துள்ளார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) விளையாட்டரங்கில் நேற்று காலை (01) இடம்பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஜனாதிபதி வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மலையக மக்களை பொறுத்தவரையில் பலர் தற்காலிக நாட்சம்பளம் குறித்து பேசி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒரு நிரந்தர தீர்வு என்னும் அடிப்படையில் 1700 ரூபா சம்பளத்தினை பெற்று தந்துள்ளார்.
மேலும், மலையக மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..