இறக்காமம் பிரதேசத்தில் அண்மைக்காலமாக தனியார் மருத்துவமனை மற்றும் பார்மசிகளில் வைத்திய ஆலோசனை இன்றி பயிற்று விக்கப்படாத மருந்து கலவையாளர்களால் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில் இறக்காமம் பிரதேசத்தில் ஒரு சில நோயாளிகள் பாதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களது தலைமையில் திடீர் பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டு அவை நேரடியாக அவதானிக்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் M.I.இஸ்மாயில் அவர்களது தலைமையில் இறக்காமம் சுகாதார வைத்து அதிகாரி எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் பார்மசி உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் தனியார் மருத்துவமனைகள் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது சம்பந்தமாகவும் தெளிவுபடுத்தப்பட்டு வைத்தீர்கள் இல்லாத நேரங்களில் தனியார் மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட கூடாது என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அவர்களால் எச்சரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
மேலும் இறக்காமம் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற ஏராளமான தனியார் மருத்துவமனைகளில் பயிற்றுவிக்கப்படாத நபர்களால் மருந்துகள் விநியோகிப்பதும் மற்றும் இரத்தப் பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்படுவதும் மிகவும் பொருத்தமற்ற விடை என்றும் அவர் சுட்டிக் காட்டியதோடு அவற்றில் ஏற்படுகின்ற பாதகங்கள் சம்பந்தமாகவும் தெளிவூட்டப்பட்டு ஒரு சில தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.