கிளப் வசந்த மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட இருவர், வெளிநாட்டில் இருந்து பாதாள உலகத்தை வழிநடத்திய லொகு பட்டியுடன் பல ஒப்பந்தங்களை செய்துள்ளமை அத்துருகிரிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு சந்தேகநபர்களும் லொகு பட்டிக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு பல்வேறு வகையான தண்டனைகளை வழங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்காக லொகு பட்டியிடமிருந்து பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரு சந்தேகநபர்களும் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி இலக்கங்களின் அடிப்படையில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களைக் கண்டறிய முடியும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பலர் கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, சர்வதேச பொலிஸாரினால் பெலாரஸில் கைது செய்யப்பட்ட லொக்கு பட்டியை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.