நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளியினால் தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் குழந்தைகளிடையே தோல் நோய் பிரச்சினைகள் மிகவும் பொதுவான ஒன்றாக உள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படுவதோடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு அதிகரிக்கும்.
எனவே, அதிக சூரிய ஒளி படும் இடங்களில் இருப்பதை தவிர்ப்பதோடு, அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.
மேலும், செயற்கையான குளிர் பானங்களை அருந்துவதை தவிர்த்து இயற்கையான தண்ணீர், எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவற்றை பருக வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ப்பாட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வதால் இன்று (28) முதல் செப்டெம்பர் 06 ம் திகதி வரையில் சூரியன் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.
அதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவன்கோட்டை மற்றும் சுண்டிக்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்.
இந்த நிகழ்வுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களே காரணம் என வளிமண்டலவியல் ஆய்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.