சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூன்று போர்க்கப்பல்களும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்திற்கு சொந்தமான “HE FEI”, “WUZHISHAN” மற்றும் “QILIANSHAN” ஆகிய மூன்று போர்க்கப்பல்கள் இன்று (26) காலை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Destroyer ரக போர்க்கப்பலான “HE FEI” 144.50 மீற்றர் நீளம் கொண்டதுடன் 267 பணியாளர்களைக் கொண்டது.
Landing Platform Dock வகையை சேர்ந்த “WUZHISHAN” போர்க்கப்பல் 210 மீட்டர் நீளமும் 872 பணியாளர்களையும் கொண்டுள்ளது.
Landing Platform Dock வகையின் “QILIANSHAN” போர்க்கப்பல் 210 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 334 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
பயிற்சிக்குப் பிறகு, கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ஓகஸ்ட் 29 அன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளது.
இதேவேளை, இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் மும்பை’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (26) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
வேகமான Destroyer ரக போர்க்கப்பலான குறித்த கப்பல் 163 மீட்டர் நீளம் கொண்டதாகும். மேலும் இக்கப்பலில் 410 ஊழியர்களும் உள்ளனர்.