ஜேர்மனியில் (Germany) கடந்த வெள்ளிக்கிழமை (24) நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் மூவரை கொன்றதாக சிரிய இளைஞன் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த கத்திக்குத்து தாக்குதல் ஜேர்மனியில் சோலிங்கன் (Solingen) நகரில் நடந்துள்ளது.
இதில், 56 மற்றும் 67 வயதான இரு ஆண்கள் மற்றும் 56 வயதுடைய ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சால்ஜிங்கென் நகரில் நடந்த ‘Festival of Diversity’ எனும் ஒரு நிகழ்ச்சிக்காக மக்கள் கூடியிருந்தபோதே, இந்த கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இத்தாக்குதலை நடத்தியதாக 26 வயதான சிரியா நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.