இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை சார்பில் தனஞ்சயடி சில்வா 74 ஓட்டங்களையும், மிலான் ரத்நாயக்க 72 ஓட்டங்fளையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் கிறிஸ் வோர்க்ஸ் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், எஸ் பாசிர 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில், ஜே.ஸ்மித் 111 ஓட்டங்களையும், ஹெரி ப்ருக் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் அசித்த பெர்ணான்டே 103 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களையும் பிரபாத் ஜெயசூரிய 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் கமிந்து மெண்டிஸ் 113 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமல் 79 ஓட்டங்ளையும், மெத்தியூஸ் 65 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் கிறிஸ் வோர்க்ஸ் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மெத்தியு போட் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதை அடுத்து, 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜே ரூட் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அசித்த பெர்ணான்டே மற்றும் பிரபாத் ஜெயசூரிய லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.