ஒன்லைன் ஊடாக பல தரப்பட்ட மோசடிகள் இடம் பெற்று வருகின்றமை யாவரும் அறிந்து விடயமே.
நேற்று மஸ்கெலியா நகரில் பெறும் பாலான வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் தொலைபேசி ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறி ஏமாற்றுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த நிலையில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்து உள்ளனர்.
அதிலும் குறிப்பாக தற்பொழுது முகநூல் ஊடாக பலதரப்பட்ட மோசடிகள் இடம் பெற்று வருகின்றது.
எனவே தயவு செய்து உங்களுடைய இரகசிய குறியீடுகள்,
மற்றும் வங்கி தரவுகள்,
தொலைபேசியில் உள்ள ஒன்லைன் (விண்ணப்பம்) அப்ளிகேஷன்க்கள்,
போன்றவற்றை மிகவும் அவதானமாக பாதுகாப்பானதாக கையாளுவது உங்களுடைய கடமை.
அது மாத்திரமல்ல இன்னும் பல வழிகளில் இவ்வாறான ஒன்லைன் மோசடிகள் இடம் பெற்று வருகிறது.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து நீங்கள் கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்களிடமிருந்து ஒரு பணம் பரிமாற்றம் செய்யப்படுமானால்,
அதற்கான சகல ஆதாரங்களையும் நீங்கள் பெற்ற பிறகு உங்களுடைய பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும்.
ஆதாரம் இல்லாமல் நீங்கள் இழக்கின்ற எந்தவித பணத்திற்கும் சட்ட ரீதியாக உங்களுடைய பணம் மீண்டும் கிடைக்காது.
அதிகமாக பல லட்சம் ரூபாய்களை இழந்த நபர்கள் யார் என்றால்,
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலியான முகவர்கள் மற்றும் ஒன்லைன் ஊடாக அதிஷ்டம் கிட்டியுள்ளது என்று கூறி ஏமாற்றுபவர்களிடம் பணத்தினை கொடுத்து ஏமாறுவது நீங்களே.
பலதரப்பட்ட விழிப்புணர்வு பதிவுகள் எமது குழுவிலும் செய்தி தாள் ஊடாக செய்திகள் ஊடாக பதிவிறக்கம் செய்தாலும்,
மீண்டும் மீண்டும் நீங்கள் அதே தவறை செய்து கொண்டு இருக்கின்றீர்கள்.
நீங்கள் அவர்களிடத்தில் இணைவதாக இருந்தால் முதலில் அவர்களுடைய முழு ஆதாரங்களையும் எடுத்த பிறகு இணைந்து கொள்ளுங்கள்.
அது எந்த வகையான ஆன்லைன் சேவையாக இருந்தாலும் சரி.
எனவே தயவு செய்து விழிப்புடன் இருங்கள்.
உங்களுடைய பணத்தினை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை விடுக்கின்றனர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள்.