எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிய செலாவணி கையிருப்பு குறையும் போது, வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கண்டி (Kandy) மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் கருத்து வேறுபாடுகளும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி உயர்வால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் கடினமான காலமாக இருந்தது.இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது என்றும் குறிப்பிட்டு்ள்ளார்.