இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரின் போது விராட் கோஹ்லியின் துடுப்பாட்டம் குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி 30 மேற்பட்ட ஓட்டங்களை எந்த ஒரு போட்டியிலும் பெறத்தவறி விட்டார்.
இந்த தொடரில் இந்தியா 0-2 என்ற அடிப்படையில் தோல்வியடைந்தது.
1997ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் துடுப்பாடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
கோஹ்லி 24, 14 மற்றும் 20 என்ற ஓட்டங்களையே முறையே மூன்று போட்டிகளிலும் பெற்றார்.
இந்தநிலையில் ஆரம்பத்தில் ரோகித் சர்மா அதிரடியை காட்டியபோதும், கொழும்பின் ஆடுகளத்தின் மேற்பரப்பு இடை ஒவர்களின் போது கடினமாகவே இருந்து என்று கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் விராட் கோஹ்லியை தாம் பாதுகாக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.